நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி நஷ்டஈடு

By செய்திப்பிரிவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன்.

இவர் கடந்த 1994-ம் ஆண்டு இஸ்ரோவின் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரளா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதில், நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என சிபிஐயால் அறிவிக்கப்பட்டது. நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னதாக, இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணன் குற்றவாளி இல்லை என்றும், ரூ.50 லட்சத்தை இழப்பீடு தொகையாக நம்பி நாராயணனுக்கு வழங்குமாறும் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இழப்பீடு தொகை போதாது என்று கூறி திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே நம்பி நாராயணன், வழக்கு விவகாரத்தை விசாரித்து வந்த கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலர் ஜெயக்குமார், அவருக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கி சமரசம் செய்யவேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்றுநம்பி நாராயணனுக்கு மேலும் ரூ.1.30 கோடியை இழப்பீடாக வழங்க கேரள அமைச்சரவை கொள்கை ஒப்புதலை வழங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்