ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை

By ஏஎன்ஐ

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (திங்கள்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. முதல் சுற்று முடிவில் பாஜக 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இதுதவிர, காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 3 தொகுதிகளிலும், ஜெஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) 5 இடங்களிலும், ஏஜெஎஸ்யூ ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

முன்னதாக, ஜார்க்கண்ட் அந்த மாநிலத்தில் கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

ஆளும் பாஜக, காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு இடையே போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரப்படி பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 secs ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்