ஹைதராபாத் 'திஷா’ வழக்கு: சுட்டுக்கொல்லப்பட்ட நால்வர் உடல் மீது மீண்டும்  பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

நவம்பர் 27ம் தேதி நாட்டையே உலுக்கிய விலங்குநல மருத்துவர் திஷா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட நால்வரின் உடல்களையும் மீண்டும் 2வது முறையாகப் பிரேதப் பரிசோதனை நடத்த தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள் மாலை 5 மணிக்குள் இந்தப் பிரேதப்பரிசோதனை நடத்தி முடிக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 6ம் தேதி ஷாத் நகர் சதன்பள்ளி அருகே திஷா நெருப்பு வைத்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே குற்றம்சாட்டப்படட் நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிரேதப்பரிசோதனையை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை 3 மூத்த தடயவியல் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று தெலங்கானா அரசுக்கு தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான், நீதிபதி ஏ.அபிஷேக் ரெட்டி ஆகியோர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இந்த இரண்டாவது பிரேதப்பரிசோதனை வீடியோவாகப் பதியப்பட்டு அது உயர் நீதிமன்ற பதிவாளர் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். திங்கள் மாலை 5 மணிக்குள் பிரேதப்பரிசோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

மாநில அரசு அமைத்த எஸ்.ஐ.டி., என்கவுண்டரில் போலீஸார் பயன்படுத்திய துப்பாக்கி பற்றிய விவரங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்திய துப்பாக்கிகள் தடயவியல் ஆய்வுக்காக ஹைதராபாத் மத்திய தடயவியல் சோதனைச்சாலைக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஷாத்நகர் என்கவுண்டர் தொடர்பான போலீஸ் தொலைபேசி அழைப்புப் பதிவுகள், செல்போன் கோபுர லொகேஷன்கள் உள்ளிட்ட விவரங்களை எஸ்.ஐ.டி. சேகரிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்