என்கவுன்ட்டர் நடவடிக்கையை சட்டப்பூர்வமாக்க வேண்டும்: பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கருத்து

By செய்திப்பிரிவு

ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸாருக்கு பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற நடவடிக்கையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து மேற்கு வங்கத்தின் ஹூக்ளி தொகுதி பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கூறியதாவது:

நமது நாட்டுக்காக எடுக்கப்பட்ட மிகச் சிறந்த நடவடிக்கை இது. காலையில் இந்த செய்தியை படித்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆன்மா இப்போது சாந்தி அடைந்திருக்கும். அவரது குடும்பத்திரும் மன அமைதி அடைந்திருப்பார்கள். இதுபோன்ற என்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்.

ஹைதராபாத் சம்பவம் போன்று நடந்தால் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். அல்லது 7 முதல் 15 நாட்களுக் குள் என்கவுன்ட்டர் செய்யப்பட வேண்டும். ஹைதராபாத் போலீஸார் நிகழ்த்திய என்கவுன்ட் டருக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு லாக்கெட் சாட்டர்ஜி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

33 mins ago

ஓடிடி களம்

35 mins ago

விளையாட்டு

50 mins ago

சினிமா

52 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்