ஹைதராபாத் என்கவுன்ட்டர்:  உலக அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத் என்கவுன்ட்டர் விவகாரத்தில் பொதுமக்கள் ஆதரவு பெருகி வருகிறது. குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவும், கால்நடை பெண் மருத்துவருக்குக் கிடைத்த நீதியாகவும் இதைப் பார்க்கும் பொதுமக்கள் தங்களது கருத்தை ட்விட்டரில் பதிவிடுவதால் #Encounter ஹேஷ்டேக் உலக அளவிலும், இந்திய அளவிலும் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர், 4 பேர்கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு கொடூரர்கள் தப்பிச் சென்றனர்.

நிர்பயா வழக்குக்குப் பின் நாடெங்கும் பலத்த கண்டனத்துக்குள்ளான இந்த வழக்கில் அடுத்த 48 மணிநேரத்தில் லாரி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை சைபராபாத் போலீஸார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று அதிகாலை குற்றவாளிகளை அழைத்துச் சென்று எப்படிக் கொலை செய்தனர் என்பதை நடித்துக் காட்டச் செய்தனர்.

அப்போது 4 பேரும் போலீஸாரின் துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் 4 பேரையும் போலீஸார் சுட்டுக்கொன்றனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை நாடெங்கும் பொதுமக்கள் போற்றி வருகின்றனர். ஹைதராபாத் போலீஸாருக்கு உள்ளூர் தாண்டி வெளி மாநிலங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் தளம் ட்விட்டர் ஆகும். தற்போது ட்விட்டரில் காலை முதல் பலரும் என்கவுன்ட்டர் குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்ததால் #Encounter, #hyderabadpolice, #justiceforpriyanakareddy, #JusticeForDisha ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இதில் #Encounter ஹேஷ்டேக் 1 லட்சத்து 27 ஆயிரம் பதிவுகளுடன் உலகில் 5-வது இடத்திலும் இந்தியாவில் முதலிடத்திலும் உள்ளது. அடுத்து #hyderabadpolice 66.8K, #JusticeForDisha 40.6K,,#justiceforpriyanakareddy 17.2K அளவிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த என்கவுன்ட்டர் மூலம் ஹைதராபாத் போலீஸாரை வாழ்த்தி வரும் ஹேஷ்டேகும் ட்ரெண்டாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

சினிமா

8 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

32 mins ago

க்ரைம்

38 mins ago

க்ரைம்

47 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்