பெளர்ணமி வழிபாடு: அயோத்தி, வாரணாசியில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்

By செய்திப்பிரிவு

அயோத்தி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் வட இந்திய மாத கால கணக்குபடி கார்த்திகை பெளர்ணமி கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தியின் சரயூ நதியில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் கோயில் கட்டுவதற்கான திட்டத்தை 3 மாதத்தில் உருவாக்குவதுடன், ஒரு அறக்கட்டளையை தொடங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் வட இந்திய காலக் கணிப்புப்படி, கார்திகை மாத பெளர்ணமி இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வட இந்திய மக்கள்புனித நதிகளில் நீராடி வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, அயோத்தியின் சரயூ நதியில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

அயோத்தி தீர்ப்புக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சரயூ நதியில் இன்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே புனித நகரான வாரணாசியில் கங்கை நதியிலும் இன்று லட்சகணக்கான மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்