அயோத்தி வழக்குக்கு பெரிதும் உதவிய 364 ஆண்டு பழைய கையெழுத்து பிரதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, சுமார் 364 ஆண்டுகள் பழமையான கையெழுத்து பிரதிகள் அடங்கிய புத்தகம் உதவியுள்ளது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், இந்து அமைப்புகளுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு 364 ஆண்டுகள் பழமையான 'அயோத்யா மகத்மயா' என்ற கையெழுத்து புத்தகமே பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் 92 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் புத்தகத்தில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை 'ராமஜென்ம பூமி புனருதர் சமிதி' என்ற அமைப்பு நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்திருந்தது. இந்தப் புத்தகத்தில் உள்ள ஆதாரங்கள், இத்தகைய தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்திருக்கும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்