அயோத்தி தீர்ப்பு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு: இந்துமஹாசபா வழக்கறிஞர் வரவேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய அரசின் வேற்றுமையில் ஒற்றுமை கொள்கைக்கு எடுத்துக்காட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் வெளியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து இந்து மஹாசபா வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா, "இது வரலாற்று சிறப்புமிக்க தீப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கு எடுத்துக்காட்டு" என்றார்.

கோஷமிட்ட வழக்கறிஞர்கள்.. தடுத்த சகாக்கள்..

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த சில வழக்கறிஞர்கள் ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிட்டனர்.

அதனைத் தடுத்து நிறுத்திய சக வழக்கறிஞர்களும், அங்கே குழுமியிருந்த பொதுமக்களும் சிறு சர்ச்சைகூட ஏற்பட்டுவிடக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதனையடுத்து கோஷம் கைவிடப்பட்டது.

பல ஆண்டுகளாக நடந்துவந்த அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க ஆயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்