அயோத்தி தீர்ப்பு சமூக நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

By செய்திப்பிரிவு

பாட்னா

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.

அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க அயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒவ்வொருவரு நபராலும் வரவேற்கப்பட வேண்டியது. இது சமூக நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். இதில் இனிமேலும் எந்த சர்ச்சையும் இருக்கக்கூடாது. அதுதான் மக்களுக்கு நான் முன்வைக்கும் கோரிக்கை" என்றார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியோர் உரிமை கொண்டாடினார்கள். இதை சரிபாதியாகப் பிரித்துக்கொள்ள கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசனம் அலகாபாத் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்டிக் கொள்ளவும், பாபர் மசூதியை வேறு இடத்தில் கட்டவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் அது திருப்தியளிப்பதாக இல்லை என்றும் அனைத்து முஸ்லிம் சட்ட வாரிய அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 mins ago

சினிமா

28 mins ago

இந்தியா

50 secs ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்