ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மூத்த தலைவர் ஜார்க்கண்டில் சுட்டுக் கொலை

By ஐஏஎன்எஸ், பிடிஐ

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீ ஸாருடன் நடந்த மோதலில் மாவோ யிஸ்ட் மூத்த தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு வர் கைது செய்யப்பட்டார்.

கும்லா மாவட்டம், சென்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் கூடியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தனர். போலீஸார் தங்களை நோக்கி வருவதை கண்டு, அவர்களை நோக்கி மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இவர் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சில்வெஸ்டர் மின்ஸ் எனத் தெரிய வந்தது. இவரது தலைக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது.

மோதலுக்குப் பின் தில்பார் என்ற மற்றொரு மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர். இவரைப் பற்றிய தகவலுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக் கப்பட்டிருந்தது.

இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ மாவட்டத்தில் 30 வாகனங்களுக்கு மாவோயிஸ்ட்கள் தீ வைத்தனர்.

இம்மாவட்டத்தின் பெர்மோ என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கப் பணியில் சிசிஎல் என்ற மத்திய அரசு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் இங்கு வந்து, அங்கிருந்த பாதுகாவலர்களை வெளியேற்றி விட்டு 30 வாகனங் களுக்கு தீ வைத்தனர்.

நேபாள எல்லைக்கு அருகில், உ.பி.யின் ருபைதியா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நேபாள மாணவர்களும் படித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை இம் மாணவர்களுடன் இந்தப் பள்ளியின் பேருந்து நேபாள எல்லைக்குள் சென்றது.

இந்நிலையில் நேபாள மாவோ யிஸ்ட்கள் தங்கள் பகுதியில் ‘பந்த்’ அறிவித்திருந்ததால், நேபாள்கஞ்ச் என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்தனர். பின்னர் குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு பேருந்துக்கு தீவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்