மாடுகளை கடத்திச் சென்றவர்கள் மீது என்கவுன்ட்டர் : காயத்துடன் தப்பி ஓட முயன்றவர்களை சுற்றிவளைத்த உ.பி.போலீஸ்

By செய்திப்பிரிவு

நொய்டா (உ.பி.)

மாடுகளை கடத்திய மூன்றுபேர் மீது போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தினர். அப்போது, காயத்துடன் தப்பி ஓட முயன்ற போது அவர்களை போலீஸார் சுற்றி வளைத்து கைதுசெய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

நேற்று நள்ளிரவில், ஹப்பூர் மாவட்ட எல்லை அருகே நடைபெற்ற இந்த நம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

சவ்னானா கிராமத்தில் இருந்து மாடுகள் கடத்தப்படுவது குறித்த ஜார்சா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல் படை ஒன்று சாலைகளில் செல்லும் வாகனங்களை சோதனையிடும் பணியில் ஈடுபட்டது.

ஹப்பூர் மாவட்ட எல்லை அருகே சந்தேகத்திற்கிடமான பிக்-அப் வாகனம் ஒன்றை விசாரிப்பதற்காக போலீஸார் நிறுத்தினர். ​​அதில் இருந்தவர்கள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர்.

போலீஸாரும் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஆண்கள் மூன்று பேர் காயமடைந்தனர், மேலும் மூன்று பேர் இருளில் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் சுற்றிவளைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சோனு, பப்பு மற்றும் மெஹந்தி ஆகிய மூவரும் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள தவுலானா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது ஒரு மாடு, ஒரு எருமை, மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டன, அவற்றின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்