உ.பி., அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களின் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடை பெற்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து, நாடு முழுவதும் பல் வேறு மாநிலங்களில் உள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் தேர்தல் நடத்தப்பட்டது.

உத்தரபிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, சிக்கிம், கேரளா, அருணாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம் உட்பட 17 மாநிலங்களில் உள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகள் இதில் அடங்கும்.

இந்நிலையில், இத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மொத்தமுள்ள 51 தொகுதி களில் 18 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 11 தொகுதி களுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள் ளது. சமாஜ்வாதி கட்சி 3 தொகுதி களில் வெற்றி பெற்றிருக்கிறது.

குஜராத்தில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 4 தொகுதி களை காங்கிரஸ் கைப்பற்றியுள் ளது. ஆளும் பாஜக 2 தொகுதி களில் வெற்றி பெற்றுள்ளது.

பிஹாரை பொறுத்தவரை, தேர் தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் ஆளும் ஜேடியு 1 இடத்திலும், முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு தொகுதியை மஜ்லீஸ் முஸ்லிமின் கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியை சுயேச்சை வேட்பாள ரும் கைப்பற்றியுள்ளனர்.

கேரளாவில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 3 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள ஓரிடத் தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், தர்மசாலா தொகுதியில் தனது டெபாசிட் தொகையை இழந்து படுதோல்வியடைந்துள்ளது.

பஞ்சாபை பொறுத்தவரை, 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 3 தொகுதிகளை ஆளும் காங்கிரஸ் கைப்பற்றியது. ஒரு தொகுதியில் எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தவரை, மொத்தமுள்ள 2 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் ஓரிடத்திலும், ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருக் கின்றன.

சிக்கிமில் 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 2 தொகுதிகளையும், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 1 தொகுதியையும் கைப்பற்றின. அசாமில் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் பாஜகவும், அனைத்திந்திய ஐக் கிய ஜனநாயக முன்னணி 1 தொகுதி யிலும் வெற்றி பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தில் 1 தொகு திக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற் றுள்ளது. இதேபோல், ஒடிசாவில் தேர்தல் நடைபெற்ற ஒரு தொகுதியை ஆளும் பிஜு ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது.

சத்தீஸ்கரில் ஓரிடத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. மேகாலயாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி யான ஐக்கிய ஜனநாயகக் கட்சி (யுடிபி) வெற்றி பெற்றுள்ளது.

தெலங்கானாவில் ஒரு தொகுதியை ஆளும் டிஆர்எஸ் கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் ஒரு தொகுதியை சுயேச்சையும் கைப்பற்றின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்