ஒடிசாவில்  பிஜூ ஜனதாதளம் அசத்தல் வெற்றி: 97,990 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்

ஒடிசாவில் ஒரு தொகுதிக்கு நடந்த சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் பிஜூ ஜனதாதள கட்சியின் பெண் வேட்பாளர் ரீட்டா சாஹூ 97,990 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து ஹிஞ்சலி தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அவர் பெஜ்பூர் தொகுதியை ராஜினாமா செய்தார்.
இந்த தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியின் பெண் வேட்பாளர் ரீட்டா சாஹூ ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 957 வாக்குகள் பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கரிதா 37,967 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து சாஹூ 97,990 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திலிப் குமார் பாண்டா 5,873 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

46 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்