எந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக எம்எல்ஏ பேச்சு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஹரியாணா தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக எம்எல்ஏ பக்ஷி சிங் பேசும் வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளமும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

ஹரியாணா தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக எம்எல்ஏ பக்ஷி சிங் பேசும் வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். மேலும் ‘பாஜகவில் இவர் தான் நேர்மையான மனிதர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அசந்த் தொகுதி தற்போதைய எம்எல்வான பக்ஷி சிங், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தங்களால் தெரிந்து கொள்ள முடியும் எனவும், எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு பாஜகவுக்கு விழும்படி செய்துள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

10 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

18 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

24 mins ago

ஆன்மிகம்

34 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்