மகாராஷ்டிரா, ஹரியாணாவில் இன்று தேர்தல்: 2 மக்களவை, 51 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

By செய்திப்பிரிவு

மும்பை/சண்டிகர்

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவை தவிர 17 மாநிலங்களை சேர்ந்த 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் 288 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 235 பெண்கள் உட்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.9 கோடி பேர் வாக் குரிமை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 96,661 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. 6.5 லட்சம் தேர்தல் அலுவலர்களும் சுமார் 3 லட்சத் துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களும் பணியில் ஈடுபட் டுள்ளனர்.

மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேசிய ஜன நாயக கூட்டணியில் பாஜக 152, சிவசேனா 124, கூட்டணியை சேர்ந்த சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 147, அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங் களில் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ளன. பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

ஆட்சியைப் பிடிக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன.

ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 105 பேர் பெண்கள். மாநிலத்தில் 1.83 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 16,357 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 75,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதி களிலும் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ளன. இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீத முள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளமும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரச்சாரம் செய்துள்ளது. பிரதமர் மோடி உட்பட பாஜக மூத்த தலைவர்கள் வாக்கு சேகரித்துள்ளனர்.

இடைத்தேர்தல்

17 மாநிலங்களைச் சேர்ந்த 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதன்படி பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் உத்தர பிரதேசம் 11, குஜராத் 6, கேரளா 5, பிஹார் 5, சிக்கிம் 3, பஞ்சாப் 4, அசாம் 4, தமிழகம் 2, ராஜஸ்தான் 2, இமாச்சல பிரதேசம் 2, ஒடிசா, தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்