கல்கி ஆசிரமத்தில் 4-வது நாளாக வருமான வரி சோதனை; ரூ.100 கோடி பணம், ஆவணங்கள் சிக்கின: வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிசீலனை

By செய்திப்பிரிவு

என்.மகேஷ்குமார்

திருப்பதி

கல்கி பகவான் ஆசிரமத்தில் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுவரை நடத்திய சோதனையில் மொத்தம் ரூ. 100 கோடி பணம், நகை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்துள்ளதால், கல்கி சாமியாரையும், அவரது மனைவியையும் தேட சிபிஐக்கு பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்கி பகவானுக்கு சொந்தமான 40 ஆசிரமங்களிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவர் வசிப்பதாக கூறப்படும் ஆந்திர மாநிலம், வரதய்ய பாளையம் ஆசிரமத்தில் நேற்று தொடர்ந்து 4-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணையும் நடத்தப்பட்டது.

சுமார் ரூ.409 கோடிக்கு கணக்கு காட்டாமல் இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதுவரை ரூ. 100 கோடி பணம், 88 கிலோ தங்கம், ரூ. 5 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பல ஏக்கர் நில பத்திரங்களை இதுவரை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சுமார் 500 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுவதால், கல்கி பகவானிடம் நேரடியாக விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆசிரமத்தில் இருப்பவர்கள் கூட அவரை பார்த்து சுமார் 2 ஆண்டுகள் ஆனதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அவர் வெளிநாட்டுக்கு எங்கா வது தப்பி சென்றாரா ? அல்லது உயிருடன்தான் இருக்கிறாரா? என்பது தற்போது கேள்விக்குறி யாகி உள்ளது. அவரது பாஸ் போர்ட்டையும் வருமான வரித் துறையினர் தேடினர். ஆனால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இதனால் வருமான வரித்துறையினர் இவ் வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா என்றும் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது. நேற்று 4-வது நாளாக வரதய்ய பாளையம் ஆசிரமத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்