மாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும் தானா? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

2012-ம் ஆண்டை ஒப்பிடுகையில் நாடுமுழுவதும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்து விட்டதாக 2019-ம் ஆண்டின் கால்நடை கணக்கெடுப்பு கூறுவதாக சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தது. அதன்பின் நீதிமன்றக் காவலில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப் பிரிவு சிதம்பரத்தைக் காவலில் எடுத்துள்ளது. அவரை விசாரிக்க 24-ம் தேதி வரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில் சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

‘‘என் சார்பாக இந்த ட்வீட்டை பதிவிடும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் எனது குடும்பத்தினர் இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர்.

50 சதவீதம்பேர் வேலைவாய்ப்பு நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர். 30 சதவீத்துக்கும் மேலானோர் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர். அப்படி என்றால் வேலையில்லா திண்டாட்டம் என்பது மிக மோசமாக இருக்கிறது என்றே பொருள்’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே மற்றொரு ட்வீட்டில் ‘‘2012-ம் ஆண்டை ஒப்பிடுகையில் நாடுமுழுவதும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்து விட்டதாக 2019-ம் ஆண்டின் கால்நடை கணக்கெடுப்பு கூறுகிறது. மாடுகள் மீதான உங்கள அன்பு வெறும் காகிதத்தில் தான் இருக்கிறது என்று பொருள். அதற்காக இனப்பெருக்கம் அல்லது எண்ணிக்கையை அதிகரிப்பது என பொருள் கொள்ளக்கூடாது’’ எனக் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்து 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் பல்வேறு மாநிலங்களில் நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 secs ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்