எல்லா கிராமங்களுக்கும் நீர்ப்பாசனம்: வேளாண் அமைச்சக திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By பிடிஐ

அனைத்து கிராமங்களுக்கும் பாசன வசதி அளிக்கும் பிரதமரின் விவசாய நீர்ப் பாசனத் திட்டத்துக்கு (பிஎம்கேஎஸ்ஒய்) மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

விவசாயிகள் பருவ மழையை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையிலான இத்திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சகம் பரிந் துரை செய்திருந்தது. இந்நிலை யில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாட்டில் விவசாயத்துக்கு ஏற்ற 142 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 65 சதவீத நிலம் நீர்ப்பாசன வசதி பெறாத நிலையில் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

‘ஆன்லைன் தேசிய விவசாய சந்தை’ ஏற்படுத்தும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதில் கூடுதல் வாய்ப்புகளை பெற இத்திட்டம் உதவும். ஆன்லைன் சந்தை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய இத்திட்டத்தில் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்.

இவ்விரு திட்டங்கள் தவிர, வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் வகையில், அதை குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இருப்பு வைக்க கூடாது என்ற உத்தரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 mins ago

இந்தியா

8 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

31 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்