ஒரு தேசம் ஒரு ஃபாஸ்டாக் மாநாட்டை நிதின் கட்கரி திங்களன்று தொடங்கிவைக்கிறார்

By செய்திப்பிரிவு

புதுதில்லி

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, ஒரு தேசம் ஒரு ஃபாஸ்டாக் மாநாட்டை புதுடெல்லியில் திங்களன்று தொடங்கிவைக்கிறார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர், ஜென்ரல் (ஓய்வு) வி.கே.சிங் மற்றும் மத்திய-மாநில நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டின் போது, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த மின்னணு சுங்கக் கட்டண நடைமுறையை உருவாக்குவது தொடர்பாக, மாநில அரசுத்துறைகள் / பிற அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட உள்ளது. வாகனத்தில் ஒட்டப்படும் ஒரே ஃபாஸ்டாக்கை, நாட்டிலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பயன்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்யும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு எண்ணற்ற சேவைகள் கிடைக்கும்.

ஃபாஸ்டாக்கை ஜிஎஸ்டி ஈ-வே ரசீது நடைமுறையுடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்திற்கும், சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்புக்கும் இடையே மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. இந்த நடைமுறை ஒருங்கிணைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. ஈ-வே ரசீது நடைமுறையுடன் ஃபாஸ்டாக்கை ஒருங்கிணைப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட வாகனம் எங்கு செல்கிறது என்பதை வருவாய் அதிகாரிகள் கண்காணிக்கவும், ஈ-வே ரசீது தயாரிக்கப்படும் போது வணிகர்களால் தெரிவிக்கப்பட்ட இடத்திற்குத்தான் சம்பந்தப்பட்ட வாகனம் செல்கிறதா என்பதையும் உறுதி செய்ய முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்