விவசாயி, சிறுவியாபாரி வாங்கிய கடன் தள்ளுபடி: ஹரியாணாவில் ஐஎன்எல்டி வாக்குறுதி

By செய்திப்பிரிவு

சண்டிகர்

ஹரியாணா மாநில சட்டப் பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்திய தேசிய லோக்தள் (ஐஎன்எல்டி) கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநிலத் தலைவர் பீர்பால் தாஸ் தாலியா நேற்று வெளியிட்டார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

விவசாயிகள், சிறுவியாபாரிகள் வாங்கிய ரூ.10 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைப்படி விவசாயிகளின் விளை பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

விவசாயிகளின் மின் கட்டணங் கள் ரத்து செய்யப்படும். வீடு களுக்கு முதல் 200 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. விவ சாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம் 2 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும். மேலும் பொருளாதாரத் தில் நலிந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.5 லட்சம் திருமண உதவியாக வழங்கப்படும். மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

28 mins ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்