ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தில் அம்பானி; 8 இடங்கள் முன்னேறிய அதானி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய அளவில் கெளதம் அதானி 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2019-ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஆகும்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் கோடீஸ்வர இந்தியராக முகேஷ் அம்பானி உள்ளார். முகேஷ் அம்பானி தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அதானி குழுமத்தின் கெளதம் அதானி 1,11,500 கோடி ரூபாய் சொத்துகளுடன் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இருந்த இடத்தில் இருந்து இந்த ஆண்டு பட்டியலில் அவர் 8 இடங்கள் முன்னேறியுள்ளார்.

அசோக் லேலண்ட் உரிமையாளர்கள் இந்துஜா சகோதரர்கள் 1,10,800 சொத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

ஷபூர்ஜி குழுமத்தின் பலோன்ஜி மிஸ்திரி 1,06,500 கோடி ரூபாய் சொத்துகளுடன் நான்காவது இடத்தையும், கோட்டக் மஹிந்திரா வங்கியின் உதய் கோட்டக் 1,05,100 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தையும், ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் ஷிவ நாடார் 1,02,300 கோடி ரூபாய் சொத்துகளுடன் 6-வது இடைத்தையும் பிடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்