வங்கிப் பரிவர்த்தனை, வரி விவரங்கள் உட்பட அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்க விரைவில் தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையம்: சிபிஐ, அமலாக்கத் துறை, ரா அமைப்புகளுக்கு பகிர முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

வங்கிப் பரிவர்த்தனைகள், வரி செலுத்துபவர்கள், ரயில் மற்றும் விமானப் பயணிகள் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து வைக்கும் தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையம் (நேட்கிரிட்), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக செயல்பாட்டு வரவுள்ள தாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீவிர வாத தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்திய இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டன.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி என்பவர் மூலமாக மும்பை பகுதிகளின் வீடியோக்கள் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி களுக்கு கிடைத்ததும், அதனை அடிப்படையாக வைத்தே அவர்கள் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, உளவுத் தகவல்களை சேகரிக்கும் முயற் சியை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த வகையில், நாட்டு மக்கள் தொடர்பான முக்கியமான அனைத்து விவரங்களையும் ஓரிடத்தில் சேகரித்து வைத்து உரிய நேரத்தில் புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்க வகை செய்யும் ‘நேட்கிரிட்' (தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையம்) என்ற அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது அந்தப் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதை அடுத்து, தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையமா னது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு மக்களின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள், விமானம் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள், குடியேற்றத் தகவல்கள், வரி செலுத்துபவர்கள், கடன் அட்டை களை வாங்குபவர்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என அனைவரின் விவரங்களும் உட னுக்குடன் இந்த அமைப்பில் சேக ரிக்கப்பட்டுவிடும்.

பின்னர், தேவைப்படும்பட்சத் தில், சிபிஐ, அமலாக்கத்துறை, ரா அமைப்பு உள்ளிட்ட புலனாய்வு மற்றும் உளவு நிறுவனங்களுக்கு இந்தத் தகவல்கள் பகிரப்படும்.

குற்றவாளிகளை பிடிக்க..

இந்தத் தகவல்களைக் கொண்டு, குற்றவாளிகளை எளி தில் அடையாளம் காண முடியும் என்றும், தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப் படுவோரின் நடவடிக்கைகளை யும் தொடர்ந்து கண்காணிக்க இயலும் எனவும் அவர்கள் தெரி வித்தனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்