கோதாவரி படகு விபத்தில் பலி எண்ணிக்கை 38ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

என்.மகேஷ்குமார்

காகிநாடா 

ஆந்திர மாநிலத்தில் பாயும் கோதாவரி ஆற்றில், பாப்பி கொண்டலு பகுதிக்கு கடந்த ஞாயிறன்று ‘ராயல் வசிஷ்டா’ எனும் படகில் மொத்தம் 73 பேர் புறப்பட்டனர். அப்போது சிறிது தூரம் சென்றதும் படகு சுழலில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

மற்றவர்களை தேடும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது. மத்திய பேரிடர் மீட்பு குழு வினர் 2 குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே விசாகப்பட்டினத் தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகு இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். கோதா வரி ஆற்றில் 315 அடி ஆழத்தில் படகு புதைந்திருந்தது. மேலும், இதில் சில சடலங்களும் சிக்கி இருப்பது தெரியவந்தது. அவற்றை மீட்கும் பணிகளில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

நேற்று முன் தினம் காலை இப் படகு 210 அடி ஆழத்துக்கு வந்தது. ஆயினும் 61 அடி ஆழம் வரை மட்டுமே மீட்பு குழுவினரால் செல்ல முடிந்தது. சுழல், அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுக்குள் அதிக ஆழத்துக்கு செல்ல முடியாமல் மீட்பு குழு வினர் திரும்பினர். நேற்று இப்படகு 65 அடி ஆழத்தில் காணப்பட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் ஒரே நாளில் அப்பகுதியில் 16 சடலங்கள் கரை ஒதுங்கின. மேலும் நேற்று 10 சடலங்கள் கரை ஒதுங் கின. இதுவரை இந்த விபத்தில் மொத்தம் 38 பேர் இறந்துள்ளனர்.

மேலும் 12 பேர் காணவில்லை எனும் புகார் வந்துள்ளதால் இவர் களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவி னர் இரவும் பகலுமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்