இந்திய பெருங்கடலில் 7 சீன போர்க்கப்பல்கள் கடற்படை உளவு விமானம் கண்டுபிடித்தது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்திய பெருங்கடலில் இந்திய கடல் எல்லை அருகே 7 சீன போர்க்கப்பல்கள் நெருங்கி வந்திருப்பதை கடற்படை உளவு விமானம் கண்டுபிடித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த கடல் பகுதியில் சீனாவும் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்காக இலங்கை, மியான்மர், டிஜிபோத்தி நாடுகளில் சீன அரசு குத்தகை அடிப்படையில் கடற்படைத் தளங்கள், துறைமுகங்களை அமைத்துள்ளது.

எனவே சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை இந்திய விமானப் படையின் பி-81 உளவு விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகி றது. இந்த மாத தொடக்கத்தில் சீன கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 7 போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இந்திய எல்லையை ஒட்டி முகாமிட்டிருந்ததை பி-81 உளவு விமானம் கண்டு பிடித்தது. சீனாவின் அதிநவீன ‘ஜியான்- 32' போர்க் கப்பலும் இந்திய எல்லை அருகே வந்து சென்றுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியபோது, "ஏடன் வளைகுடா பகுதியில் கடற் கொள்ளையர்களை கண்காணிக்க சீன போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர்க்கப்பல்கள் இந்திய எல்லையை ஒட்டி வந்து சென்றிருப் பதை உளவு விமானம் கண்டுபிடித் துள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தன.

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஜப்பான் இணைந்து செயல்படுகின்றன. நான்கு நாடுகளும் இணைந்து அவ்வப் போது இந்திய பெருங்கடலில் கூட்டு போர் ஒத்திகைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக சீனாவின் அத்துமீறலை தடுக்க ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தங்கள் கடல் எல்லையில் கண்காணிப்பை அதிகரித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்