வேலைக்கு தகுதியில்லை என்று கூறி வடமாநிலத்தை சேர்ந்தவர்களை கங்வார் அவமானப்படுத்துகிறார்: பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

லக்னோ

‘‘வேலைக்குத் தேர்ந்தெடுக்க வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்று கூறி அவர்களை மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அவமானப்படுத்தி உள் ளார்’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச் சர் சந்தோஷ் குமார் கங்வார் பேசினார். அப்போது அவர் கூறும் போது, ‘‘நாட்டில் வேலைவாய்ப் பின்மை அதிகரித்து வருவதாக தினந்தோறும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள் ளன. தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சராக இதுபோன்ற செய்திகளை நான் கவனமாக ஆய்வு செய்து வரு கிறேன். ஆனால், நாட்டில் வேலைக்குப் பற்றாக்குறை எது வும் இல்லை. ஆனால், பல நிறு வனங்கள் தங்களுக்குத் தேவை யான வேலையில் ஆட்களை நிய மிக்க, வட மாநிலத்தைச் சேர்ந் தவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்று புகார் தெரிவிக் கின்றன’’ என்று பேசினார்.

இதற்குக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் நேற்று கடும் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:

அமைச்சர் (கங்வார்) அவர் களே, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் ஆட்சிதான் நடக்கிறது. ஆனால், நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆனால், நாட்டில் வேலைவாய்ப்புகள் என் னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரண மாக பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வட மாநிலத் தவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்று கூறி தப்பிக்க முயற்சிக்கின்றீர்கள். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்