பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டு மாபெரும்  இயக்கம் : மீண்டும் ஒருமுறை இந்திய ரயில்வே நடத்துகிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி,

“பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதை” நோக்கமாகக் கொண்டு “மாபெரும் உழைப்புதான” இயக்கத்தை மீண்டும் ஒருமுறை இந்திய ரயில்வே நடத்துகிறது.

இது வரும் செவ்வாயன்று, 17 செப்டம்பர் 2019 நடைபெறவுள்ளது. சமீப காலத்தில் இத்தகைய இயக்கங்களை ரயில்வே நடத்தியுள்ளது. தற்போது நடைபெறும் இயக்கம் 2.10.2019 – லிருந்து செயல்படுத்தப்பட உள்ள ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை பற்றி வியாபாரிகள் உட்பட ரயில்வேயில் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கானது.

இத்தகைய முன்முயற்சிகளுக்கு இந்திய ரயில்வே வழிகாட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

இந்த இயக்கத்தையொட்டி, அனைத்துக் கோட்டங்களின் தலைவர்களுக்கும், ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 17, 2019 அன்று நடைபெறவுள்ள மாபெரும் உழைப்புதான இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையத்திலும், அருகே உள்ள பகுதிகளிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ரயில்வே ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், ரயில்வே ஓய்வூதியதாரர்கள், ரயில்வேயோடு தொடர்புடையவர்கள், சுயஉதவிக் குழுக்கள் பங்கேற்கும் உடல் உழைப்புதான இயக்கத்திற்கு ரயில் நிலையங்களில் உள்ள மூத்த அதிகாரிகளும், இந்திய ரயில்வேயில் மற்ற நிலையில் உள்ள அதிகாரிகளும் தலைமையேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தில் தொண்டு அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனை வெற்றிகரமாக்க தொழிலாளர் சங்கங்களும் தீவிரமாக ஈடுபடலாம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்