50 கோடி ஆடு, மாடு, கோழிகளுக்கு தடுப்பூசி திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

மதுரா

நாடு முழுவதும் 50 கோடி ஆடு, மாடு, கோழிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் விலங்குகள் நோய் தடுப்புத் திட்டத்தை (என்ஏடிசிபி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு கால் பாதம் மற்றும் வாயில் ஏற்படும் கோமாரி மற்றும் கருச்சிதைவு நோய்களை ஒழிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி 2024-க்குள் நாடு முழுவதும் ஆடு, மாடு, பன்றி கள் உள்ளிட்ட 50 கோடி கால்நடை களுக்கு தடுப்பூசி போடப்படும். ரூ.12,652 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் செயல் படுத்தப்படும்.

இந்த திட்டத்தின்படி, 2025-க்குள் இந்த நோய்களைக் கட்டுப்படுத் தவும், 2030-க்குள் முற்றிலும் ஒழிக் கவும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரதமர் மோடி சில விவசாயிகள், கால்நடை மருத்துவர்களுடன் கலந் துரையாடினார். பின்னர் தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தை யும் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, தூய்மையே சேவை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து எடுத்துக் கொண்டிருந்த துப்புரவு பெண் தொழிலாளர்கள் 25 பேரை பிரதமர் மோடி சந்தித்தார். அப் போது, தரையில் உட்கார்ந்து அவர் களுக்கு உதவியபடியே கலந் துரையாடினார். முகக்கவசமும் கையுறையும் அணிந்திருந்த அவர் களிடம், வீடுகளில் இருந்து சேகரிக் கப்படும் குப்பைகள் குறித்தும் அதில் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

அப்போது, மோடி பேசும் போது, “பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள் ளது. மேலும் கால்நடைகள் மற்றும் மீன்களின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, ஒரு முறை பயன்படக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டு கோள் விடுத்தார்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம்

இதனிடையே, நாட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கும், விவசாயி களுக்கும் மாத ஓய்வூதியம் வழங் கும் திட்டங்களை மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வருகை தரும் அவர், இத்திட்டங் களை தொடங்கி வைக்கிறார். இது தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய சட்டப் பேரவைக் கட்டிடம், அங்குள்ள சாஹிப்கஞ்ச் நகரில் அமைக்கப் பட்டிருக்கும் நீர்வழிப் போக்கு வரத்து முனையம் ஆகிய வற்றையும் மோடி திறந்து வைக்க உள்ளார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்