பொருளாதாரச் சரிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க திட்டம் எங்கே? - சிதம்பரம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி,

பொருளாதாரச் சரிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க திட்டம் எங்கே? என மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது. சிபிஐ காவல் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் உள்ள சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சிதம்பரம் கூறுகையில், ‘‘பொருளாதாரத்தை எண்ணி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் குறைவு, வேலையிழப்பு, தொழில் சரிவு, முதலீடு குறைவு ஆகியவற்றால் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீழ்ச்சி மற்றும் சரிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க திட்டம் எங்கே?’’ என்று கேட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்