நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல்; பிரதமர் நரேந்திர மோடி, கே.பி.ஒலி தொடங்கி வைத்தனர்

By செய்திப்பிரிவு

காத்மாண்டு/புதுடெல்லி

இந்தியா - நேபாளம் இடையிலான பெட்ரோலிய பைப்லைன் திட்டத்தை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் கே.பி.ஒலி ஆகியோர் நேற்று கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இமயமலை பகுதியில் அமைந் துள்ள நாடான நேபாளத்தில் கச்சா எண்ணெய் பொருட்களை எடுத்துச் செல்ல முழுக்க முழுக்க போக்குவரத்தையே நம்பி இருக் கும் சூழல் உள்ளது.

இந்தியாவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலமாக மட்டுமே பெட் ரோல் மற்றும் டீசல் போன்றவை நேபாளத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டு வருகின்றன. 1973-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன்படி பெட்ரோலிய பொருட்கள் இந்தியா விலிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பைப்லைன் மூலம் பெட்ரோலிய பொருட்களை அனுப்ப 1996-ம் ஆண்டு திட்டமிடப் பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகி யும் இந்த திட்டம் செயல்படுத்தப் படவில்லை. இதனிடையே இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் உள்ள மோதிகாரியில் இருந்து நேபாளத்தின் அமேலக்கஞ்ச் இடையே பைப்லைன் அமைக்கும் புதிய திட்டம் 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதனை செயல் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் பணிகள் முடிந்து இந்த திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் கே.பி.ஓலியும் இந்தத் திட்டத்தை வீடியோ லிங்க் மூலம் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் தெற்காசியாவில் ஒருநாட்டின் எல்லையை தாண்டி மற்றொரு நாட்டுக்கு பைப்லைன் மூலம் பெட்ரோலிய பொருட்கள் செய்யும் முதல் திட்டமாக இது அமைந் துள்ளது. 69 கிலோமீட்டர் தூரத் துக்கு இந்த பைப்லைன் அமைந் துள்ளது.

நேபாளத்தின் காத்மாண்டுவி லிருந்து வெளியிட்ட அறிக்கை மூலம் இந்தத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசிஎல்) ரூ.324 கோடி செலவில் பைப்லைன் அமைத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, “இரு நாடுகளும் இணைந்து இந்தத் திட்டத்தை முன் னெடுத்திருப்பதன் மூலம் இது போன்ற திட்டங்கள் வரும் நாட்க ளில் மேலும் சிறப்பாக அமையும்.

குறிப்பிட்ட காலத்துக்கு முன்ன தாகவே இந்தத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதன் மூலம் நேபாள மக்கள் அதிக பயன் அடைவார்கள்” என்றார்.

ஆண்டுதோறும் இந்த பைப்லைன் மூலம் இந்தியாவி லிருந்து நேபாளத்துக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட் கள் அனுப்பப்படும் என்று தெரிய வந்துள்ளது. திட்டம் குறித்து நேபாள பிரதமர் கே.பி.ஒலி கூறும்போது, “இந்தத் திட்டம் தொடங்கப்பட் டுள்ளது நேபாளத்தின் மிகப்பெரிய சாதனையாகும். இந்தியாவும், நேபாளமும் மக்களின் வளர்ச்சி, செழிப்பு, மகிழ்ச்சியை லட்சியமாகக் கொண்டு செயல்படுகின்றன.

நேபாளத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும் இந்தியாவுக்கு எங்களது பாராட்டுகள்” என்றார். பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

12 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

1 hour ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்