புதுடெல்லியில் அடுத்த அதிர்ச்சி: சிக்னலைத் தாண்டியதால் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.32,500 அபராதம் தீட்டிய போலீஸார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தலைக்கவசம் அணியாமலும், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாமல் பயணித்ததாலும் ரூ.23,000 அபராதம் விதித்து அதிர்ச்சியளித்த டெல்லி போக்குவரத்துக் காவல்துறை செவ்வாயன்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்னலை மீறியதற்காக ரூ.32,500 அபராதம் விதித்து மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் அமலானது முதல் டெல்லி போலீஸார் சாலையில் வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் ஏழை ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 32,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது அங்கு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி சிகந்தர்பூர் செக்டார் 26-ல் முகமது முஸ்தகில் என்ற ஆட்டோ ஓட்டுநர் தவறுதலாக சிக்னலில் சிகப்பு எரிந்ததைப் பார்க்காமல் தாண்டி விட்டு போலீசில் சிக்கினார். உடனே அதை எடு இதை எடு என்று போலீஸார் வழக்கம் போல் கேட்க, அவரிடம் கையில் ஆவணங்கள் இல்லை. டி.எல்.எஃப். பேஸ் 3இல்தான் வீடு உள்ளது போய் எடுத்து வருகிறேன் என்று அவர் எவ்வளவோ மன்றாடியும் போலீசார் கேட்கவில்லை என்று தெரிகிறது.

ரூ.32,500 அபராதம் விதித்து சலானை அவர் கையில் திணித்துள்ளனர்.

இது குறித்து முகமது முஸ்தகில் ஆட்டோ ஓட்டுநர் ஊடகங்களிடம் கூறும்போது, “எனக்கு 10 நிமிடங்கள் கொடுங்கள் வீட்டுக்குச் சென்று ஆர்சிபுக் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருகிறேன் என்று மன்றாடிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை. போக்குவரத்து விதிமீறல்களுக்கான தற்போதைய அபராத உயர்வு பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை” என்றார்.

இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் டெல்லியில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அதாவது ஓட்டுநர் உரிமம் இல்லாம வாகனம் இயக்கியதற்காக ரூ.5000, பதிவுச்சான்றிதழ் ரூ.5000, மூன்றாம் நபர் காப்பீடு ரூ.2000, காற்று மாசு சான்றிதழ் ரூ.10,000, செக்யூரிட்டி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் பிளேட் ரூ.500, அபாயகரமான ஓட்டுதல் ரூ.5000, சிக்னலை மதிக்காமல் மீறியது ரூ.5000 என்று தீட்டி சலானை அவர் கையில் கொடுக்க அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

அவர் கோர்ட்டில் நல்ல வழக்கறிஞர் உதவியுடன் தான் ஆட்டோவை மீட்க முடியும். இதே போல்தான் இருசக்கர வாகன ஓட்டி தினேஷ் மதன் என்பவர் ஹெல்மெட் அணியாமல், ஆவணங்கள் இல்லாமல் பயணித்ததற்காக ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், எம்.ஜி.சாலை போக்குவரத்து ஆய்வாளர் சதீஷ் குமார் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கும் போது, “ஆயிரக்கணக்கான் ரூபாய்களுக்கான அபராதங்களை விதித்து வருகிறோம் இதில் அதிகபட்ச தொகையான ரூ.42000-மும் உண்டு” என்றார் ஆனால் யாருக்கு ரூ.42000 விதிக்கப்பட்டது என்ற விவரங்களை ஆய்வாளர் அறிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

தொழில்நுட்பம்

47 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்