ட்விட்டரில் கேரளாவைக் கொண்டாடிய பிரதமர் மோடி: பதிலடி கொடுத்த ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

ட்விட்டரில் கேரளாவைக் கொண்டாடி ட்வீட் செய்த பிரதமர் மோடிக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது ஏன் வரவில்லை எனக் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி.

முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "தனிப்பட்ட முறையில் கேரளாவும் என் மனதுக்கு நெருக்கமான இடம். கேரளாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு பலமுறை கிடைத்திருக்கிறது. பிரதமர் பொறுப்பு எனக்கு மீண்டும் கிடைத்தவுடன் நான் முதலில் செய்தது கேரளாவின் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றதுதான்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி, "அன்புள்ள மோடி அவர்களே, நீங்கள் குருவாயூர் வந்து சென்றவுடன் கேரளாவில் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. உயிரிழப்புகளையும், பேரழிவையும் அது ஏற்படுத்தியது. நீங்கள் மட்டும் உரிய நேரத்தில் வெள்ள நிலவரத்தைப் பார்வையிட வந்திருந்தால் பாராட்டியிருப்பேன். கேரளா இப்போதும் வருந்துகிறது.

மற்ற வெள்ள பாதிப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதுபோல் கேரளாவுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று ரீட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்