சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ கேட்கிறது: கபில் சிபல் வாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி
சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ அதிகாரிகள் கேட்டுகிறார்கள், அவர்களிடம் கேட்பதற்கு கேள்விகளே இல்லை என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன் வைத்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிதம்பரம் சார்பில் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். அவர் தனது வாதத்தில் கூறுகையில்
‘‘ஏற்கெனவே 12 கேள்விகளை கேட்டுள்ளனர். அந்த கேள்விகளுக்கு சிதம்பரம் ஏற்கெனவே பதிலளித்து விட்டார்.

தற்போது அதே கேள்விகளையே திரும்பவும் கேட்கின்றனர். நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டபோதிலும், இன்று காலை 11 மணிக்கு தான் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சிதம்பரத்திடம் கேட்பதற்கு சிபிஐ வசம் கேள்விகளே இல்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் வெளியே உள்ளனர். யாரும் சிறையில் இல்லை. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியும் வேறு வழக்கில் தான் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது.

இந்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெறுகிறது. இதுவரை நடந்த விசாரணை எதையும் அவர் தவிக்கவில்லை’’ எனக் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்