‘ஓவர் ஸ்பீட் போனால் இனி மாநில முதல்வர்களே அதிக அபராதம் கட்ட நேரிடும்’: செப். 1 முதல் புதிய விதிமுறைகள் - நிதின் கட்கரி 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி, தி இந்து பிசினஸ்லைன்

மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலாகும் என்று கூறிய நிதின் கட்கரி இந்த புதிய அபராத விதிமுறைகளை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

இதில் போக்குவரத்து விதிமீறல், ஹெல்மெட், மது அருந்தி விட்டு வாகனம் இயக்குதல், சீட்பெல்ட் அணியாமல் கார் இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் கடும் அபராதங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ஓவர் ஸ்பீட் பிரிவிலும் கடும் தண்டனைகள் அபராதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகள் செப்.1ம் தேதி அமலாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததோடு, “சிசிடிவி கேமராக்கள் யார் ஓட்டுகிறார்கள் என்ற பாகுபாடு பார்க்காததால் இனி மாநில முதல்வர்கள் ஓவர் ஸ்பீட் சென்றாலே அதிக அபராதம் செலுத்த வேண்டி வரும்” என்று கூறியுள்ளார்.

சில விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும், இனி சட்டமானப்பின் வரப்போகும் அபராதமும் ஒரு பார்வை:

* ஹெல்மெட் இல்லாமல் (without helmet)வாகனம் ஓட்டினால் முன்பு அபராதம் ரூ 100 இனி- ரூ 1000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.

* குடித்துவிட்டு வாகனம் (drunken drive)ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.2000 இனி- ரூ.10000

* சாலை விதிகளை பின்பற்றாமல் (traffic violation)வாகனம் ஓட்டினால் முன்பு ரூ. 100 இனி- ரூ.500

* ஓட்டுனர் உரிமம் இல்லாமல் (without licence) வண்டி ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.500 இனி- ரூ.5000

* ஓட்டுனர் உரிமம் தகுதி இழப்பு (licence suspend) செய்யப்பட்டிருக்கும் பொழுது வண்டி ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.500 இனி- ரூ.10,000

* இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தால் (without insurance) முன்பு அபராதம் ரூ.1000 இனி- ரூ. 2000

* ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வண்டி ஓட்டினால் (rash driving)முன்பு அபராதம் ரூ. 1000 இப்பொழுது ரூ. 5000

* அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வண்டி ஓட்டினால் (over speed) முன்பு அபராதம் ரூ. 500 இப்பொழுது ரூ. 5000

* இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் (triples) சென்றால் முன்பு அபராதம் ரூ.100 இனி-ரூ 2000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.

இதில் புதிதாக சில சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, அவை:

* ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறாக வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதமாக விதிக்கப்படும்.

* 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் அவர்களின் பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது ரூ. 25,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். சிறார் மீது அதற்குரிய வழக்கு பாயும், வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கோல்டன் அவர் எனப்படும் அந்த நேரத்துக்கு முன்னுரிமை அளித்து எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வாகன விபத்தில் உயிரிழப்பவர்களுக்கான இன்ஷுரன்ஸ் தொகையும் அதிகரிக்கப்படும். மேலும் என்னென்ன சட்டங்கள் உள்ளது, மாற்றப்பட்டுள்ளது என்பது நடைமுறைக்கு வரும்போது தெரியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

க்ரைம்

21 mins ago

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்