காஷ்மீர் விவகாரத்தில் காங். தலைவர் ஹூடா ஆதரவு: புதிய கட்சி தொடங்க திட்டமா?

By செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நட வடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியாணா முன் னாள் முதல்வருமான பூபேந்தர்சிங் ஹூடா ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநில வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை முதல் அமைச்சராக இருந்த ஒரே தலைவர் பூபேந்தர்சிங் ஹூடா. இவரது மகனான தீபேந்தர் சிங் ஹூடாவும் காங்கிரஸில் உள்ளார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த மாவட்டமான ரொஹ தாக்கில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், பூபேந்தர் சிங் ஹூடா பேசும்போது, ‘நான் தேசபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவன். தேசபக்தியின் மீது நான் யாரிடமும் சமரசம் கொள்ள மாட்டேன். காஷ்மீரின் 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு நான் ஆதரவளிக்கிறேன். காங் கிரஸ் கட்சி, தான் சென்று கொண் டிருந்த பாதையை மறந்துவிட்டது’ என பேசினார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, ‘ஹூடா தலைமையில் ஹரி யாணாவில் நடைபெற்ற சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு தோல்வியே கிடைத்தது.தற்போது காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்க ஹூடா குடும்பம் திட்டமிடுகிறது’ என்றனர்.

எனவே, வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஹூடா தனிக்கட்சி துவங்கி போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

க்ரைம்

3 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்