வங்கி மோசடி; ம.பி. முதல்வர் கமல் நாத் மருமகன் ரதுல் பூரி கைது: அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி,

வங்கியில் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்தின் மருமகனும், தொழிலதிபருமான ரதுல் பூரியை அமலாக்கப் பிரிவினர் இன்று கைது செய்தனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் ரதுல் பூரியைக் கைது செய்துள்ளோம் என்று அமலாக்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

மோசர் பேயர் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் சிபிஐ கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில் ரதுல் பூரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தீபக் பூர், மற்றொரு இயக்குநர் நீட்டா பூரி அவரின் மகன் ரதுல் பூரி ஆகியோரின் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது.

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரும் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். போலியான ஆவணங்கள் மூலம் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சிடி, டிவிடி போன்றவற்றைத் தயாரிக்கும் மோசர் பேயர் நிறுவனம் கடன் காரணமாக நலிவுற்று மூடப்பட்டது.

நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்தபோது ரூ.345 கோடி முறைகேடாக செலவு செய்யப்பட்டு, மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மோசர் பேயர் நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் நேற்று சிபிஐ திடீரென ரெய்டு நடத்தியது. இந்த சூழலில் அமலாக்கப் பிரிவினர் ரதுல் பூரியை நேற்று இரவு கைது செய்தனர்.

ரதுல் பூரிக்கு எதிராக வங்கி மோசடி மட்டுமல்லாமல், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கிலும் அமலாக்கப் பிரிவு ரதுல் பூரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரதுல் பூரிக்கு எதிராக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராக ரதுல் பூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், தற்போது வங்கி மோசடி வழக்கில் ரதுல் பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

சுற்றுச்சூழல்

21 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்