பேராயருக்கு எதிராக போராடும் கன்னியாஸ்திரி சிறைவைப்பு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்

கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் கன்னிஸ்திரி ஒருவரை பேராயர் பிராங்கோ முலக்கல் பலமுறை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியும் அவருக்கு ஆதரவாக மேலும் 4 கன்னியாஸ்திரிகளும் உண்ணா விரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து பேராயரின் பதவி பறிக்கப்பட்டு அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ் திரிக்கு ஆதரவாக போராடிய 4 கன்னியாஸ்திரிகளில் ஒருவர் லூசி. அவர் ஆடம்பரமாக வாழ்வ தாக குற்றம் சாட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ சபை சில நாட்களுக்கு முன்பு அவரை நீக்கியது. வய நாட்டில் உள்ள கான்வென்டில் இருந்து லூசி வெளியேற வேண்டும் என சபை நிர்வாகம் உத்தரவிட் டுள்ளது. இதுதொடர்பாக நீதி மன்றத்தில் முறையிட அவர் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆராதனையில் லூசி பங்கேற்பதை தடுக்க சிலர் கன்வென்ட் கதவை வெளிப்புறமாக பூட்டியுள்ளனர். கான்வென்ட் வளாகத்திலேயே அவர் சிறைவைக்கப்பட்டார். இது தொடர்பாக லூசி தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. போலீஸார் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கூறியபோது, “கன்னியாஸ்திரி சிறை வைக்கப் பட்டது தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்