‘கிருஷ்ணா’ வெள்ளத்தில் சிக்கிய சந்திரபாபு நாயுடு வீடு: காலி செய்ய நோட்டீஸ்; அரசியல் சதி என புகார்

By செய்திப்பிரிவு

விஜயவாடா

கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 39 பேர் வீடுகளை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் அல்மாட்டி அணையில் இருந்து சில தினங்களுக்கு முன்பு 5 விநாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் முழுவதும் கிருஷ்ணா நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் மற்றும் நாகர்ஜூனா சாகர் அணைகளை நிரப்பியுள்ளன. இந்த அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

பிரகாசம் பேரேஜ் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 8 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தலைநகர் அமராவதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் வீடுகளை காலி செய்யுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர்களின் வீடுகளால் வெள்ளம் ஏற்படுவதாக கூறி அதனை இடிக்க மாநில அரசு முயலுகிறது, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்