‘‘நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை’’ - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மாயாவதி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

லக்னோ

நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகி இருப்பதால் இதனைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் நசிந்து வருகின்றன. ஏற்றுமதி குறைந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை ஆகாத நிலை உள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, விலைவாசி உயர்வு, சுகாதாரப் பிரச்சினைகள், வன்முறை, பதற்றம் போன்றவை ஏற்படும். வர்த்தக சமூகம் பெரும் சோர்வடைந்துள்ளது.

வேலையிழப்பால் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது. மத்திய அரசு இதனைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்