பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் கூடுகிறது அமைச்சர்கள் குழு

By செய்திப்பிரிவு

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) அமைச்சர்கள் குழு கூடி ஆலோசனை மேற்கொள்கிறது.
இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத் துறை அமிச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பொக்ரானில் அணுஆயுத சோதனை நடத்தப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதில் எதிரிநாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே இதுவரை இந்தியாவின் கொள்கையாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.

கடந்த 5-ம் தேதி, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழலே நிலவிவருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அணுஆயுத கொள்கை தொடர்பான கருத்து முக்கியத்துவம் பெற்றது.
இந்த சூழலில் இன்று டெல்லியில் ராஜ்நாத் சிங் இல்லத்தில் முக்கிய அமைச்சர்கள் கூடி ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

43 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்