காஷ்மீரில் பக்ரீத் பண்டிகைக்கு தயாராகும் மக்கள்: வதந்தி பரப்பினால் நடவடிக்கை; அரசு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீரில் முழுமையாக அமைதி திரும்புகிறது, வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில போலீஸார் எச்சரித்துள்ளனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப் பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பக்ரீத் பண்டி கையை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் 144 தடையுத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
மளிகை, மருந்து, காய்கறி கடைகள் திறந்துள்ளன. ஜம்மு சந்தையில் மக்கள் பொருட்களை வாங்க இன்று பெருமளவு குவிந்தனர்.

இதேபோன்று ஸ்ரீநகரின் பல பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.ஸ்ரீநகரில் பல இடங்களில் 144 தடை உத்தரவு விலகிக்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுத்தனர். இதனால் எடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல இடங்களில் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் காணப்படுகிறது. முக்கிய இடங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் முழுமையாக அமைதி திரும்புகிறது, வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில போலீஸார் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

39 mins ago

உலகம்

45 mins ago

ஆன்மிகம்

43 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்