பதவி விலகிய சமாஜ்வாதி எம்.பி.க்கள் சஞ்சய் சேத், சுரேந்திர சிங் நாகர் பாஜகவில் இணைந்தனர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகிய சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களான சஞ்சய் சேத் மற்றும் சுரேந்திர சிங் நாகர் ஆகிய இருவரும் இன்று பாஜகவில் இணைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு திருத்தத் தீர்மானம், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால், மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் காலிட்டா கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசினார். கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலகினார்.

இதுபோலவே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் சஞ்சய் சேத் மற்றும் சுரேந்திர சிங் நாகர் ஆகிய இருவரும் ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமாவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அன்றயை தினமே ஒப்புதல் அளித்தார்.

அவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் சஞ்சய் சேத் மற்றும் சுரேந்திர சிங் நாகர் ஆகிய இருவரும் இன்று பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் புபேந்தர் யாதவ் முன்னிலையில் அவர்கள் தங்களை பாஜவில் இணைத்துக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்