நெருக்கடி நேரங்களிலும்கூட அமைதியாக இருக்கும் பிரதமர் மோடி: பேர் க்ரில்ஸ் பாராட்டு

By செய்திப்பிரிவு

நெருக்கடியான நேரங்களிலும்கூட அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர் பிரதமர் மோடி எனப் பாராட்டியிருக்கிறார் டிஸ்கவரி தொலைக்காட்சியின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் க்ரில்ஸ்.

உலகின் மிக ஆபத்தான, கரடுமுரடான பிரதேசங்களில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற சவால் மிகுந்த ‘மேன் வெசஸ் வைல்ட்’ நிகழ்ச்சியை நடத்தும் அவர் இந்த நிகழ்ச்சிக்கு அவ்வப்போது சில விஐபிகளையும் அழைத்துச் செல்கிறார்.

புவி வெப்பமடைதலையும் பருவநிலை மாற்றத்தையும் நேரடியாகப் பார்த்து உணர பேர் க்ரில்ஸோடு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அலாஸ்காவுக்குச் சென்றார். அந்த வரிசையில் காட்டுயிர் பாதுகாப்பின் அவசியத்தை உலகுக்கு உணர்த்த பேர் க்ரில்ஸோடு இந்தியா வனங்களுக்குள் மோடி சென்றதாகா புரோமோக்களில் கூறப்படுகிறது.

உத்தரகாண்டின் ஜிம் கார்பெட் வனப்பகுதியில்தான் இந்த சாகசம் நடந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடனான அனுபவம் குறித்து பேர் க்ரில்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "அரசியல் தலைவர்களை நாம் எப்போதும் ஒரு அலங்கார மேடையில் அழகான ஆடையில் பார்த்திருப்போம். ஆனால், வனங்களில் சுற்றித்திரிவது என்பது முற்றிலும் வேறு. இயற்கை நீங்கள் எந்த அந்தஸ்துடையவர் என்று பார்க்காது. அதன் மீதான் அக்கறையும், அதை எதிர்கொள்ளும் துணிச்சலும் உள்ளவர்களுக்கு நிச்சயம் அதற்கான வெகுமதியைத் தரும்.

நானும் பிரதமர் மோடியும் எங்கள் பயணத்தில் பெரும் கற்களில் சில நேரம் மோதிக் கொண்டோம், கடும் மழையில் சிக்கிக் கொண்டோம். எனது படப்பிடிப்புக் குழுவினர் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தனர். ஆனால், பயணம் முழுவதுமே பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார்.

அதைப் பார்ப்பதற்கு இதமாக இருந்தது. ஒரு பிரச்சினை நேரும்போதுதான் ஒருவரின் சுயம் தெரிய வரும். அந்த வகையில் ஒரு உலகத் தலைவராக பிரதமர் மோடி நெருக்கடி நேரத்திலும் சலனமில்லாமல் இருந்தது சிறப்பு.

பிரதமர் மோடியின் எளிமை என்னை ஈர்த்தது. ஒருகட்டத்தில் நாங்கள் சற்றே கன மழையில் சிக்கினோம். அப்போது அவரது பாதுகாவலர்கள் கொடைபிடிக்க முயன்றனர். ஆனால் மோடியோ அதை வேண்டாம் என்று தடுத்தார். அதேபோல் ஆற்றைக் கடக்க நான் ஒரு படகை செய்தேன்.

அந்தப் படகு பிரதமர் பயணிக்கும் அளவுக்கு பலமானதாக இல்லை என்று பாதுகாப்புக் குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் தனக்கு அந்தப் படகு திருப்தியளிப்பதாகக் கூறி என்னுடன் பயணித்தார். ஆனால், அந்தப் படகு சரியானதாக இல்லை. நான் அதிலிருந்து இறங்கி பிரதமரை படகில் வைத்து தள்ளினேன். அவர் முழுமையாக நனைந்திருந்தார். ஆனாலும்கூட அவர் முகத்தில் அந்த புன்னகை குறையவில்லை.

அவர் மிகவும் இணக்கமாக செயல்பட்டார். என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். ஆர்ப்பரிக்கும் ஆற்றின் நடுவேகூட பிரதமர் அமைதியாக புன்னகையுடன் திகழ்ந்தார்" எனப் பாராட்டியுள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி வரும் 12-ம் தேதி ஒளிபரப்பாகிறது. இதற்கான புரோமோவை தனது ட்விட்டரில் கடந்த மாதமே வெளியிட்ட பேர் க்ரில்ஸ் தற்போது தனது பயண அனுபவத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியாகக் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

க்ரைம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்