நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேசிய கீதம் இசைக்கும்போது மயக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

பொது நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தேசியகீதம் இசைக்கும்போதும் இருக்கையில் அமர்ந்தார். 

மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் மயக்கமடைந்தார். அதுபோலவே கடந்த மே மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றபோதும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இந்தநிலையில், நிதின்கட்ரி மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் பாஜக முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நிகழ்ச்சி நிறைவு பெறும்நிலையில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்றனர்.

நிதின் கட்கரியும் எழுந்து நின்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்து இருக்கையில் அமர்ந்தார். இதையடுத்து அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவருக்கு உதவி செய்தனர். மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது.  
 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்