மரண தண்டனைக்கு எதிரானவர் கலாம்

By பிடிஐ

மரண தண்டனை இருக்கலாமா, கூடாதா என வாதப் பிரதி வாதங்கள் இருந்துவரும் நிலையில், மரண தண்டனை வேண்டாம் என்பதை ஆதரித்தவர் அப்துல் கலாம்.

மரண தண்டனை தொடர்பாக கலாம் உட்பட பலரது கருத்துகளை சட்ட ஆணையம் கேட்டிருந்தது. இதற்கு மரண தண்டனை நீடிக்க வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். கலாம் உள்ளிட்ட சிலர் மட்டுமே மரண தண்டனை வேண்டாம் என பதில் அளித்திருந்தனர்.

கலாம் அளித்துள்ள பதிலில், “நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி நிறைய கருணை மனுக்கள் வரும். இவற்றில் பெரும்பாலானவற்றில் முடிவு எடுப்பதில் மிகுந்த வலியை உணர்ந்தேன். எனது பதவிக் காலத்தில் மிகவும் கடினமான பணிகளில் ஒன்றாக இது இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்