வெள்ளநீரில் சிக்கிய ரயில்: 18 மணிநேரம் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் மீட்பு

By செய்திப்பிரிவு

மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலிலிருந்து பயணிகள் பலமணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்டவர்களில் 18 மணி நேரமாக பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப்பெண்ணும்  மீட்கப்பட்டுள்ளார்.

மும்பையில் கனமழையில்  வெள்ளத்தில் நேற்றிரவு சிக்கிக்கொண்ட மஹாலஷ்மி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 700 பயணிகள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

9 மாத கர்ப்பிணியான ரேஷ்மான பிரசவத்திற்காக  தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் மும்பையில் இருந்து கோலாப்பூருக்கு சென்று கொண்டிருந்தார், அப்போதுதான் ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. ரயில் திடீரென வெள்ளநீரில் சிக்கி நின்றுவிட்டதால் வெளியேற முடியாமல் கடந்த 18 மணிநேரமாக ரயிலில் பிரசவ வலியால் ரேஷ்மா துடித்துக்கொண்டிருந்தார்.

இதனால் பீதியடைந்த அவரது உறவினர்கள் கம்பார்ட்மெண்டிலிருந்து உதவிக்கேட்டு பலருக்கும் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தனர். 700 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய  ரயிலில் ரேஷ்மாவைப்போல் மேலும் 9 கர்ப்பிணிகள்  இருந்தனர். 

தற்போது அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் ரேஷ்மா பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ரயிலில் சிக்கிய பயணிகளை  ராணுவ வீரர்கள், விமானப்படையினர், கப்பற்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூட்டாக மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்