உத்தரபிரதேச மாநிலத்தில் தனது 73-வது பிறந்த நாளில் அபராதம் செலுத்தி 17 கைதிகளை விடுவித்த தொழிலதிபர்

By செய்திப்பிரிவு

ஆக்ரா

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழி லதிபர் தனது 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 17 சிறைக் கைதி கள் செலுத்த வேண்டிய அப ராதத் தொகையைக் கட்டி அவர் களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

உ.பி. மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் மோதிலால் யாதவ். இவர் தனது 73-வது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாட முடிவு செய்தார்.

சிறிய குற்றங்களுக்கு தண் டனை விதிக்கப்பட்டு அபரா தத் தொகை செலுத்த முடியாத தால் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் சிறையில் இருக்கும் 17 கைதிகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை செலுத்த திட்டமிட்டார்.

சிறை நிர்வாகம் ஏற்பு

சட்ட ரீதியாக சிறை அதிகாரி களை தொடர்பு கொண்ட மோதி லால் யாதவ் தனது விருப்பத்தை தெரிவித்தார். இதை சிறை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அதன்படி, அபராதம் செலுத்த முடியாததால் சிறையில் இருந்த 17 கைதிகள் செலுத்த வேண்டிய ரூ.32, 380 தொகையை அவர்களுக் காக மோதிலால் யாதவ் செலுத் தினார். இதையடுத்து, அந்த 17 கைதிகளும் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

மாவட்ட சிறை கண்காணிப் பாளர் சஷிகாந்த் மிஸ்ரா கூறுகை யில், ‘‘சாகர் என்ற கைதி சிறிய குற்றத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது நடத்தை யும் நன்றாக இருந்தது. ஓராண்டுக்கு முன்பே சாகரின் தண்டனைக் காலம் முடிந்துவிட்டாலும் அவ ருக்கு விதிக்கப்பட்ட ரூ.1,089 அபராதத் தொகையை செலுத்த முடியாததால் சிறையில் இருந்தார். இப்போது மோதிலால் யாதவ் அந்த தொகையை செலுத்தியதால் சாகர் விடுதலையாகி உள்ளார்’’ என்று தெரிவித்தார்.

ஊர் திரும்ப உதவி

தொழிலதிபர் மோதிலால் யாதவ் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளின்போதும் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வேன். இந்த ஆண்டு தண் டனைக் காலம் முடிந்தும் அபராதம் செலுத்த முடியாததால் சிறையில் இருந்த கைதிகளுக்கு, அபராதத் தொகையை செலுத்தி விடுதலை செய்ய முடிவு செய்தேன். விடு தலையானவர்களில் வெளி மாவட் டங்களைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு அவர்கள் ஊர் திரும்பு வதற்கும் சாப்பிடுவதற்கும் பணம் கொடுத்து அனுப்பினேன். மனதுக்கு நிறைவாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்