பிரிட்டிஷ் கப்பல் சிறைபிடிப்பு விவகாரம்; 18 இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர்: ஈரான் வெளியுறவு அமைச்சகம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

சிறை பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலில் பணியாற்றிய 18 இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடை கள் விதிக்கப்பட்டுள்ளன. வளை குடா கடல் பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவம் அண்மையில் சுட்டு வீழ்த்தியது. இதற்குப் பதிலடியாக சில நாட் களுக்கு முன்பு ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் கப்பல் ‘ஸ்டெனா இம்பெரோ' 23 ஊழியர் களுடன் கடந்த 19-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலை ஈரான் அரசின் புரட்சிகர படை வீரர்கள் சிறை பிடித்தனர். ஈரானின் மீன்பிடி படகு மீது மோதியதால் பிரிட்டிஷ் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கப்பலில் பணியாற்றும் 23 ஊழியர்களில் 18 பேர் இந்தியர்கள். கப்பலின் கேப்டன் கேரளாவை சேர்ந்தவர். இதர ஊழியர்கள் லாட்வியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யாவை சேர்ந்தவர்கள்.

கப்பல் ஊழியர்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று கூறியபோது, 18 இந்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் பத்திரமாக, நலமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து 18 இந்தியர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக நட்புறவு நீடிக்கிறது. ஈரானின் சாபஹர் துறைமுகத்தை இந்தியா குத்த கைக்கு எடுத்து அங்கு பிரம் மாண்ட துறைமுகத்தை அமைத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

12 mins ago

உலகம்

34 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்