கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?-மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளக்கம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரும் எண்ணம் பாஜகவுக்கோ, மத்திய அரசுக்கோ இல்லை என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் முதல்வர் குமார சாமி தலைமையிலான மஜத - காங் கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பதாக குமாரசாமி அறிவித்து ஒரு வாரம் ஆகிறது.

ஆனால் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் குமார சாமியும், அவரது கூட்டணி கட்சியான காங்கிரஸாரும் நாடகம் நடத்தி வருகின்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர் மானம் மீது விவாதம் நடத்த 5 நாட்கள் வேண்டும் என அவர்கள் கூறுவதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

இதனையெல்லாம் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் எப்படி அனுமதிக்கிறார் என தெரிய வில்லை. தார்மீகரீதியில் பெரும் பான்மையை இழந்த அடுத்த கணமே குமாரசாமி முதல்வர் பத வியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அந்த அரசியல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் குமாரசாமி பின்பற்றவில்லை.

பாஜகவை குறை சொல்வது ஏன்?

பாஜகவினர் குதிரை பேரம் மூல மாக காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்கவில்லை. காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. ராஜினாமா செய்துள்ள அதி ருப்தி எம்எல்ஏக்கள் தாங்கள் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறுகையில், பாஜகவினரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?

பிரதமர் மோடியை குற்றம்சாட்டு வதை விட்டுவிட்டு, காங்கிரஸார் அவர்களது எம்எல்ஏக்களை பாது காப்பாக பார்த்துக்கொள்ள வேண் டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உரிய கால அவகாசம் கொடுத்தார். அதற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், மஜத வினர் ஆளுநருக்கு எதிராகப் பேசி வருவதை கண்டிக்கிறோம். கர் நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி யுள்ள அறிக்கை மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும். கர்நாடகா வில் குமாரசாமி அரசை கவிழ்க்க மத்திய அரசு முயல்வதாக கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை.

கர்நாடகாவில் குடியரசு தலை வர் ஆட்சியை கொண்டுவரும் எண்ணமும் இல்லை. இதில் பாஜகவையும், மத்திய அரசையும் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடக சட்டப்பேரவையில் பெரும் பான்மை உறுப்பினர்களை கொண் டுள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்