‘‘நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டோம்’’ - வீடியோ வெளியிட்ட கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்

By செய்திப்பிரிவு

மும்பை

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளனர். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் கடந்த இரு வாரங்களில் அடுத் தடுத்து ராஜினாமா செய்தனர். மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட 15 பேர் தங்களது ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர்  அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தீர்ப்பு அளித்துள்ளது. 

இதுகுறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் கூட்டாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘‘கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டோம். எங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம். கர்நாடக முதல்வர் குமாரசாமி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டோம். அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்’’ எனக் கூறியுள்ளனர். 

இதனிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ தோல்வியடையும், சத்தியம் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்