பெங்களூரு திரும்பிய அதிருப்தி எம்எல்ஏக்கள்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா?

By செய்திப்பிரிவு

மும்பை

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து இன்று பெங்களூரு திரும்பினார். உடனடியாக நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி சில நாட்கள் கால அவகாசம் கேட்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமா ஏற்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை வரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கு தேவையான நடவடிகைகளை ஆளும் கூட்டணி செய்து வருகிறது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ள நிலையில் சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.  

இதனிடையே காங்கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக  அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர். முதல்வர் குமாரசாமி உடனடியாக நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களை ராஜினாமா முடிவை திரும்ப பெறாத நிலையில் பெரும்பான்மையை நிருபிக்க முதல்வர் குமாரசாமி மேலும் சில நாட்கள் அவகாசம் கேட்பார் எனத் தெரிகிறது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்